மேல் மாகாணத்தின் பல காவல்துறைப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 9.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை மா அதிபர் சிடி விக்ரமரத்னவினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, தெற்கு மற்றும் கொழும்பு மத்தி ஆகிய காவல்துறைப் பிரிவுகளில் காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகள் ஊடாக பயணித்தல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.