171
இலங்கையில் மேல்மாகாணத்தின் பல காவற்துறை பிரிவுளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் வழமைபோன்று புகையிரத சேவையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
அதன்படி, ஏற்கனவே பல பகுதிகளில் புகையிரத போக்குவரத்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இ.போ.ச. ஊழியர்கள் ஆரம்பித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி பேருந்து போக்குவரத்து வழக்கம் போல் இன்றும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love