Home இலங்கைபேசாலை கடற்பரப்பில்  9 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் மூவா்  கைது

பேசாலை கடற்பரப்பில்  9 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் மூவா்  கைது

by admin



மன்னார் பேசாலை  கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை (25) இரவு  கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது படகொன்றிலிருந்து நாட்டிலிருந்து கடத்த முயன்ற சுமார் 470 கிராம் தங்கம் மற்றும் சங்கு (வலம்புரி) கைப்பற்றப்பட்டது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ. 09 மில்லியன் என கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 39 வயதுக்குட்பட்ட புத்தளம் மற்றும் பேசாலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

குறித்த சந்தேக நபர்கள், தங்கம், சங்கு மற்றும்  படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்க அலுவலகத்தில் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More