129
கோட்டா கோகம போராட்டக்களத்தின் முக்கியச் செயற்பாட்டாளரும் சமூக செயற்பாட்டாளருமான ‘ரட்டா’ எனப்படும் ரதிந்து சேனாரத்ன இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மே 21ஆம் திகதி நீதிமன்ற தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றப் பின்னர் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love