ஜப்பானிய நிறுவனத்திடம் இலஞ்சம் கேட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் அவர் குற்றமற்றவர் என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான குழு அறிக்கை அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
அங்கு நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான குழுவின் அறிக்கை குறித்து நேற்றைய (01.08.22) அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்து அவர் தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.