அரசியலமைப்பின் 22ம் திருத்தச் சட்டமூலம், இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட இந்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு கடந்த வாரம் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது