172
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை ஆலோசனைக் குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழு என்பவற்றை மாற்றீடுசெய்து ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவினை நிறுவியுள்ளது.
பொருளாதாரத்தின் முக்கிய ஆர்வலர்களுடனான ஈடுபாட்டினை விரிவுபடுத்தும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவிற்கு கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் பொருளியல் பேராசிரியரான பேராசிரியர் சிறிமால் அபேரத்ன தலைமை வகிப்பதுடன் உறுப்பினர்களாக, தனியார்துறையையும் கல்வித்துறையையும் சேர்ந்த தலைசிறந்த 17 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
Spread the love