கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி தலைவர் என கூறப்படும் சமூக செயல்பாட்டாளா் சேனாதி குருகேவை செப்டெம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
சேனாதி குருகே இன்று (25) நீதிமன்றத்தில் முன்னிலைப்பபடுத்தப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவரை அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு காவல்துறையினா் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவரை
இதன்படி, குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் அவரை அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளாா்.