Home இலங்கையாழில். வீதி புனரமைப்புக்கு பறிக்கப்பட்ட மணல் – கற்களை திருடியவர் கைது

யாழில். வீதி புனரமைப்புக்கு பறிக்கப்பட்ட மணல் – கற்களை திருடியவர் கைது

by admin

யாழ்ப்பாணத்தில் வீதி புனரமைப்பு பணிகளுக்காக வீதியோரமாக குவிக்கப்பட்டு இருந்த மணல் மற்றும் கற்களை திருடிய குற்றத்தில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் , திருடப்பட்ட மணல் மற்றும் கற்களை மீட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் – சங்கரத்தை வீதி புனரமைப்பு பணிக்காக துணைவி பகுதியில் மணல் மற்றும் கற்கள் வீதியோரமாக பறிக்கப்பட்டன. அவற்றில் 30 க்யூப் மணல் மற்றும் 15 கியூப் கற்கள் என்பன களவாடப்பட்டு இருந்தன. 

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அங்கு களவாடப்பட்ட மணல் மற்றும் கற்கள் மானிப்பாய் அட்டகிரி எனும் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

அதனை அடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் திருடப்பட்டு , மறைத்து  வைக்கப்பட்டிருந்த மணல் மற்றும் கற்களை மீட்டதுடன் . சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More