205
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்றுண்டி சாலைக்கு சிற்றுண்டி வழங்கும் வியாபாரியின் மோட்டார் சைக்கிள் திருட்டு போயுள்ளது.
போதனா வைத்திய சாலை வளாகத்தினுள் தனது மோட்டார் சைக்கிளில் நிறுத்தி விட்டு, சிற்றுண்டிகளை ,சிற்றுண்டி சாலைக்கு கொண்டு சென்று வழங்கி விட்டு , மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்த இடத்திற்கு திரும்பி வந்து பார்த்த போது , மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை அறிந்து கொண்டார்.
அது தொடர்பில் யாழ்.போதனா வைத்திய சாலை நிர்வாகத்திடமும் , யாழ்ப்பாண காவல்நிலையத்திலும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
Spread the love