ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (03.10.22) பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதவிப் பிரமாணம் செய்யவுள்ள அனைத்து அமைச்சர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனதகவல்கள் வெளியாகி உள்ளன.
எவ்வாறாயினும், பதவிப் பிரமாணம் செய்யும் நேரம் குறித்து இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றின் பெயர்கள் ஜனாதிபதியிடம் முன்மொழியப்பட்ட போதிலும் அவர்களில் சிலர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.