Home இலங்கைஅடிப்படை உரிமைகளை மதித்து செயற்படுவது அவசியமானது

அடிப்படை உரிமைகளை மதித்து செயற்படுவது அவசியமானது

by admin

இலங்கை அரசாங்கம் கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளை மதித்து செயற்படுவது அவசியமானது என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் தெரிவித்துள்ளார். 

பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு எப்போதும் ஆதரவளிக்க ஐரோப்பிய ஒன்றியம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜிஎஸ்பி பிளஸ் உறுதிமொழிகளை ஐரோப்பிய ஒன்றியம் மிக விரைவில் ஆராயும் எனவும் அவா் அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து இலங்கையர்களின் குறுகிய, நீண்ட கால தேவைகளை உறுதிப்படுத்தும் கொள்கைகளை அறிமுகப்படுத்தி ஜிஎஸ்பி பிளஸ் தொடா்பான அறிக்கை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2023ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More