சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான மக்கள் கலந்துரையாடல் இன்றையதினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
“சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாணத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டது.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத் தலைவர் கரு ஜயசூரிய, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், சமயத்தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டில் ஜனநாயகத்தையும் மக்களுக்கான நீதியையும்உறுதிப்படுத்தும் நோக்கில் குறித்த சிவில் சமூக அமைப்பு செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.–



