மேலுமொரு நிலக்கரி கப்பல் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரியுடன் நேற்று இலங்கையை சென்றடைந்துள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பலில் இருந்து இன்று நிலக்கரியை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதனால் , நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தின் கப்பலே இவ்வாறு வந்துள்ளதுடன், எதிர்வரும் டிசம்பர் 04ஆம் திகதிக்கு முன்னர் அந்நிறுவனத்தின் மேலும் 04 கப்பல்கள் நாட்டை வந்தடையும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான புதிய விநியோகஸ்தர் தெரிவு தொடர்பான ஒப்பந்ததாரருக்கான விண்ணப்ப காலம் நேற்றுடன் முடிவடைந்ததாகவும் இலங்கை நிலக்கரி நிறுவனம் அறிவித்துள்ளது.