அயலவர் வீட்டில் பாதுகாப்புக்கு தங்க சென்றவர் வீட்டில் புகுந்த திருடர்கள் 11 பவுண் தாலி கொடியை திருடி சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் உள்ள இரு வீட்டார்கள் இரவு வேளைகளில் பாதுகாப்பு கருதி ஒரு வீட்டில் தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் ஆட்களற்ற வீட்டினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 11 பவுண் தாலி கொடியை திருடி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.