Home இலங்கை53 வயது நெதர்லாந்து வாசியை திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்துவதாக சிறுமி வாக்குமூலம்!

53 வயது நெதர்லாந்து வாசியை திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்துவதாக சிறுமி வாக்குமூலம்!

by admin

நெதர்லாந்து நாட்டை சேந்த 53 வயதான நபரை திருமணம் செய்யுமாறு தன்னை தனது பெற்றோர் வற்புறுத்தி தாக்கினார்கள் என 15 வயதான சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். 

அச்சுவேலி  காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

குறித்த சிறுமி பிரான்ஸ் நாட்டில் இருந்து அச்சுவேலிக்கு திரும்பியிருந்த 20 வயதான இளைஞனுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர்   தலைமறைவாகி இருந்தார்.

அது தொடர்பில் சிறுமியின் பெற்றோரால் அச்சுவேலி காவல்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக தலைமறைவான சிறுமி மற்றும் இளைஞன் அச்சுவேலி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு , சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது , சிறுமிதுஸ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை என தெரியவந்ததை அடுத்து , சிறுமி அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

குறித்த சிறுமியிடம் காவல்துறையினர் , சிறுவர் நன்னடத்தை பிரிவினர் உள்ளிட்டவர்கள் முன்னெடுத்த விசாரணையின் போது , தனது பெற்றோர் தன்னை நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் 53 வயதான நபரை திருமணம் செய்யுமாறு , வற்புறுத்தி தன்னை தாக்கி வந்ததாகவும் , நெதர்லாந்து நாட்டில் உள்ளவருடன் வீடியோ கோல் மூலம் உரையாடுமாறு வற்புறுத்தினார்கள் எனவும் , அவர் தன்னை நிர்வாணமாக வீடியோ கோலில் உரையாடுமாறு கோரிய போது , தான் அதற்கு மறுத்து பெற்றோரிடம் தெரிவித்த போதும் , அவர்களும் அவருடன் அவ்வாறு உரையாடுமாறு வற்புத்தினார்கள் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதனை அடுத்து சிறுமியின் பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More