இலங்கை பிரதான செய்திகள்

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 5 பேர் தப்பியோடினர்!

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நேற்று மாலை 5 பேர் தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

22 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட 05 கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு வாருகின்றது.

இந்தநிலையில் குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தங்க வைக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களில் 5 பேரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட போதே குறித்த 5 பேரும் தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினர் இணைந்து தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.