யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதை பொருள் கட்டுப்படுத்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார், மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக போதை பொருள் பாவனை தொடர்பில் பல கூட்டங்கள் இடம் பெறுகின்ற போதிலும் அந்த கூட்டங்களுக்கு கல்வி திணைக்கள அதிகாரிகள் வருவதில்லை.
பாடசாலை மட்டங்கள் இடம்பெறும் போதைப்பொருள் செயற்பாடுகளுக்கு கல்வி திணைக்களத்தினர் கட்டாயமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆனால் அந்த கல்வித் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. எனவே போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு கல்வி அதிகாரிகள் கட்டாயமாக ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே இந்த பாடசாலை மட்டங்களில் உள்ள போதைப் பொருள் விடயங்களை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.