யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை காவற்துறையினரால் , திருட்டு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன , அவரிடமிருந்து 35இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வல்வெட்டித்துறை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட கொற்றவற்றை பகுதியில் கடந்த 21ஆம் திகதி பகல் வேளை , வீட்டில் எவரும் இல்லாத போது ,வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் , வீட்டில் இருந்த நகைகளை களவாடி சென்று இருந்தனர்.
சம்பவம் தொடர்பில் உரிமையாளரால், காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞனை காவற்துறையினர் கைது செய்துள்ளதுடன், திருட்டு நகைகள் என சந்தேகிக்கப்படும் 35 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளையும் காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக 40இற்கும் மேற்பட்ட பிடியாணைகள் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 60இற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையிலும் காவற்துறையினரால் சந்தேக நபர்களைக் கைது செய்ய முடியாதிருந்தது.
இந்தநிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியிருந்த நிலையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை. அதையடுத்து யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் காவற்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் 42 மற்றும் 43 வயதான சந்தேக நபர்கள் இருவர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். நாவற்குழி மற்றும் அல்வாயைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதன்மை சந்கேக நபரான சின்னவன் என்பவர் மீது 15 திகதியிடப்படாத பிடியாணைகளும், 8 பிடியாணைகளும் மற்றைய சந்தேக நபரான ஜெயா என்பவர் மீது 5 திகதியிடப்படாத பிடியாணைகளும், பருத்தித்துறை நீதிமன்றில் 10 பிடியாணைகளும், மேல் நீதிமன்றில் ஒரு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
சந்தேக நபர்களிடம் இருந்து கோப்பாய் பகுதியில் வழிப்பறிக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும், நெல்லியடியில் திருடப்பட்டு வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கோப்பாய், நெல்லியடி, கொடிகாமம் ஆகிய இடங்களில் வழிபறி செய்யப்பட்டது என்று நம்பப்படும் 3 சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டன.
அதேநேரம், சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் பெண் ஒருவரும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நுட்பமான முறையில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி, வீதியில் செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும், கடந்த 3 மாதங்களாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடந்த வழிப்பறிக் கொள்ளைகளுடன் இவர்களுக்குத் தொடர்பு உண்டு என்றும் காவற்துறையினர் தெரிவித்தனர்.