Home இலங்கைகல்லுண்டாயில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்

கல்லுண்டாயில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்

by admin
யாழ்ப்பாணம் மாநகர சபை தமது சபை எல்லைக்குள் கழிவுகளை கொட்டுவதனை நிறுத்த வேண்டும் என கோரி மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து இரண்டாவது நாளாக இன்றைய தினம் வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை,  மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் இருக்கும் கல்லுண்டாய் பிரதேசத்தில் கழிவுகளை கொட்டி வருகிறது. அதனால் அந்த பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் , அப்பகுதி மக்களுடன் இணைந்து மாநகர சபை தமது எல்லைக்குள் கழிவுகளை கொட்டக்கூடாது என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இரண்டாவது நாளாக இன்றைய தினம் வியாழக்கிழமையும் குறித்த பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More