செயற்கையான குருதிச் சுற்றோட்ட தொகுதி கருவியொன்றை தான் புதிதாக கண்டுபிடித்தாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரான கோகுலன் தெரிவித்தார்.
இதயம் செயலிழந்தாலோ மாரடைப்பு ஏற்பட்டாலோ உடனடியாக மூன்று நிமிடங்களுக்குள் குறித்த செயற்கை குருதிச்சுற்றோட்டத் தொகுதி கருவியை உடலில் இணைத்தால் உயிரிழப்பில் இருந்து தவிர்க்க முடியும் என்றார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இது முக்கியமான மருத்துவ கண்டுபிடிப்பாக இருக்கும். நுரையீரல் செயலிழந்தவர்களும் இதனை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
இதயமும் நுரையீரலும் செயலிழந்தவர்கள் இந்த கருவியைப் பயன்படுத்தக்கூடிய வகையில் இதயமும் நுரையீரலும் இணைந்த செயற்கையான குருதிச் சுற்றோட்ட தொகுதியாக இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவிக்கு 2009 இதயம் என பெயரிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment