கிளிநொச்சியில் சொகுசு பேருந்து விபத்துக்கு உள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தே இவ்வாறு இரணைமடு சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளானது.
விபத்தின்போது பேருந்தில் பயணித்த 22 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று (05) அதிகாலை 4.45 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இவ் விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
Spread the love
Add Comment