203
வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மரங்கள் முறிந்துள்ளதுடன் வீட்டு கூரைகள் சேதமடைந்துள்ளதோடு, விவசாய செய்கையும் பாதிப்படைந்துள்ளது.
சூறாவளி தாக்கத்தினால் நேற்று (08) இரவு மன்னார் மாவட்டத்தில் கடும் காற்று வீசியதுடன் கடுமையான குளிர் நிலை ஏற்பட்டதோடு மழையும் பெய்தது.-இதனால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது.
மேலும் மன்னார் தாழ்வுபாடு மீன கிராமத்தில் மீனவர்களின் மீன் வாடிகள் காற்றினால் சேதமடைந்துள்ளது.மேலும் படகுகள் மற்றும் மீன் வலைகள் சேதமடைந்துள்ளது.
Spread the love