Home இலங்கைசுண்ணாம்புக் கல்லுடன் கைது

சுண்ணாம்புக் கல்லுடன் கைது

by admin
யாழ்ப்பாணம், வயாவிளான் குட்டியப்புலம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்கள் கைப்பெற்றப்பட்டுள்ளதுடன்,அவற்றின் சாரதிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை  காவல்துறை பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினருக்கு, கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது உழவு இயந்திர சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உழவு இயந்திரங்களும் சுண்ணாம்புக்கல்லுடன் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் அவர்களின் உழவு இயந்திரங்கள் மேலதிக நடவடிக்கைக்காக அச்சுவேலி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More