175
யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள சீனாவின் பிரதித் தூதர் ஹு வெய், தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வியாழக்கிழமை சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு சென்று மாணவர்களுக்கான உதவித்திட்டங்களை வழங்கி வைத்தனர்.
இதன் போது மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் சிமாட் வகுப்பறைக்கான உபகரணங்கள் என்பவை அடங்கலாக 40 இலட்சம் ரூபா பெறுமதியான உதவி திட்டங்களை சீன பதில் தூதுவர் பாடசாலைச் சமுகத்திடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில் சீன தூதர அதிகாரிகள், தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் சு.கிருபாகரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
Spread the love