முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக தனது 95 வயதில் அவரது வத்திகான் இல்லத்தில் காலமானார். கத்தோலிக்கா்களின் தலைமைப் பொறுப்பான போப் பதவியை சுமார் 8 ஆண்டுகள் வகித்த 16-வது பெனடிக்ட், 2013-ம் ஆண்டில் உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகினார். இதன் மூலம் 1415-ம் ஆண்டு 12-வது கிரிகோரிக்குப் பின்னா் போப் பதவியில் இருந்து விலகிய முதல் நபரானார்.
16-வது பெனடிக்ட் தமது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை வாட்டிகனில் உள்ள மாத்தர் எக்லெசியா மடாலயத்தில் கழித்து வந்துள்ளார். எதிா்வரும் ஜனவரி 2-ம் திகதி முதல் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் அவரது உடல் வைக்கப்படும், எனவும் இறுதிச்சடங்கு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் வத்திகான் கூறியுள்ளது