164
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை(3) மாலை யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த கடற்படை சிப்பாய் பொல் பித்திகம மெலியா பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ்.பி.ரத்நாயக்க (வயது -41) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலாபத்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love