காங்கேசன்துறையில் இலங்கை வங்கியின் காரியாலயம் இன்றைய தினம் சுமார் 32 வருடங்களின் பின்னர் மீண்டும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
உள்நாட்டு யுத்தம் காரணமாக இலங்கை வங்கியின் காங்கேசன் துறை காரியாலயம் அப்பகுதி மக்களுடன் அவ்விடத்தில் இருந்து இடம்பெயர்ந்து இருந்தது.
இந்நிலையில் சுமார் 32 வருடங்களின் பின்னர் நவீனதொழில்நுட்ப வசதிகளுடன் இன்றைய தினம் காங்கேசன்துறையில் மீள திறந்துவைக்கப்பட்டது
குறித்த வங்கி கிளைதிறப்பு நிகழ்வில் இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர், வட பிராந்திய முகாமையாளர், யாழ் மாவட்ட ராணுவ கட்டளை தளபதி, பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை வங்கியின் வங்கி முகாமையாளர்கள் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Spread the love
Add Comment