Home இலங்கைஐய்யப்ப பக்தர் துப்பாக்கி ரவைகளுடன் கைது!

ஐய்யப்ப பக்தர் துப்பாக்கி ரவைகளுடன் கைது!

by admin

இந்தியா – ​கேரளவில் உள்ள ஐய்யப்பன் சுவாமியை தரிசிக்க இலங்கையிலிருந்து செல்லும் ஐய்யப்ப பக்தர்களில் ஒருவர் துப்பாக்கி ரவைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் ஐய்யப்ப பக்தர்களை சோதனையிட்டபோது சந்தேகநபரிடமிருந்து டி56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் 47 வயதுடைய சந்தேகபர் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேகநபருடன் சென்றிருந்த ஏனைய 20 ஐய்யப்ப பக்தர்களின் பொதிகளில் 30 கிலோ இரும்புப் பொருள்கள் இருப்பதையும் விமான நிலையப் காவற்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வத்தளையில் உள்ள இரும்பு வர்த்தக நிலையத்திலிருந்து இந்த இரும்புகளைப் பெற்று இந்தியாவில் விற்பதற்கு முயற்சித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More