197
யாழ்ப்பாணத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 ஆம் இலக்க வழித்தட பேருந்து ஒன்றே பருத்தித்துறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை சிறுப்பிட்டி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து , வாகன திருத்தகத்தினுள் சென்று விபத்துக்கு உள்ளானது. குறித்த விபத்தில், விபத்திற்கு உள்ளான பேருந்தும், வாகன திருந்தகத்தினுள் நின்ற வாகனங்களும் சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love