232
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில், தேங்காய் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அராலி மத்தியைச் சேர்ந்த சிவானந்தன் கஜாணன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்
கடந்த 16ம் திகதி தனது வாகனத்தை நிறுத்திவிட்டு தென்னை மரத்தின் கீழ் படுத்திருந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது, தென்னையில் இருந்து தேங்காய் ஒன்று அவரது நெஞ்சுப் பகுதியில், தேங்காய் விழுந்தது. அதில் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
Spread the love