195
எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்களை மீட்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். எல்பிட்டிய காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் படி குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவா்கள் தொிவித்துள்ளனா்.
எல்பிட்டிய பகுதியைச் சோ்ந்த 69 வயதுடைய உஹனோவிடகே மல்லிகா என்ற திருமணமான பெண்ணும் , 80 வயதான உடுகமசூரிய ஞானவதி என்ற திருமணமாகாத பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தொிவித்துள்ள காவல்துறையினா் இருவரும் கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனா்.
Spread the love