Home இலங்கையாழில். போதையில் வீடு சென்ற 14 வயது சிறுவன் – தாய் கண்டித்ததால் உயிர்மாய்பு!

யாழில். போதையில் வீடு சென்ற 14 வயது சிறுவன் – தாய் கண்டித்ததால் உயிர்மாய்பு!

by admin

மது போதையில் வீட்டுக்கு சென்ற 14 வயதுச் சிறுவனை தாய் கண்டித்ததன் காரணமாக தவறான முடிவெடுத்த சிறுவன் உயிரை மாய்த்ததாக திடீர் இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் நேற்றைய ஞாயிற்றுக்கிழமை மாலை (12.02.23) மதுபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் மது போதையில் சென்றதை அவரின் தாயார் கண்டித்துள்ளார்.

அதனால் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் நேற்றிரவு பத்து மணியளவில் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More