நியூசிலாந்தின் வெலிங்டன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் லோயர் ஹட் பகுதியில் இருந்து 78 கி.மீ தொலைவில் 6.1 ரிக்டர் அளவில் உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணியளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை
.
நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். கப்ரியல் புயலால் வெள்ளம் ஏற்பட்டு கடும் சேதத்தை சந்தித்த நிலையில் நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
கடந்த வாரம் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பல லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். பல ஆயிரம் பேர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.