பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவா் ஜனக்க ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு கொள்ளுப்பிட்டி காவல்துறையினா் சீல் வைத்துள்ளனர். கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
குறித்த அலுவலகத்தினுள் அரசாங்கத்திற்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவலுக்கமைய , அது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கையிட்டு இந்த உத்தரவு பெறப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தொிவித்துள்ளாா்.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் நாடு திரும்பியதும் அவர் முன்னிலையில் அலுவலகம் மீண்டும் திறக்கப்படும் எனவும் அவா் தொிவித்துள்ளாா்.