Home உலகம்மற்றுமொரு நிலநடுக்கம் – மூவர் பலி – துருக்கியில் தொடரும் அவலம்!

மற்றுமொரு நிலநடுக்கம் – மூவர் பலி – துருக்கியில் தொடரும் அவலம்!

by admin

REUTERS

துருக்கியின் தென் பிராந்தியத்தில் நேற்று (20.02.23)), 6.4 மெக்னிடியூட் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

துருக்கி நேரப்படி நேற்றிரவு (20.02.23) சுமார் 8.04 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர்.

ஏராளமான கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன், கட்டட இடிபாடுகளுக்குள் அதிகமானவர்கள் சிக்கிக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 06ஆம் திகதி துருக்கியின் தென் கிழக்கு மற்றும் சிரியாவின் வட பகுதிகளில் 7.8 மெக்னிடியூட் அளவிலான சக்தி வாய்ந்த இரு நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.

இந்த இரு நிலநடுக்கங்களிலும் சிக்கி துருக்கி மற்றும் சிரியாவைச் ​சேர்ந்த 44,000 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More