Home இலங்கைகஜேந்திரன் உள்ளிட்டவர்களின் வழக்கு ஒத்தி வைப்பு

கஜேந்திரன் உள்ளிட்டவர்களின் வழக்கு ஒத்தி வைப்பு

by admin
யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகை தந்த போது, எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் 18 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அன்றைய தினம் இரவு யாழ். மேலதிக நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டமையை அடுத்து, 18 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்த யாழ்ப்பாண மேலதிக நீதவான், இன்றைய தினம் புதன்கிழமைக்கு வழக்கினை ஒத்திவைத்தார்.
அதன் அடிப்படையில் இன்றையதினம் குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது ஜூன் மாதம் 14 ஆம் திகதிக்கு வழக்கினை நீதவான் ஒத்திவைத்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More