மக்களின் வாழ்வியலுடன் இணைந்த தமிழர் பாரம்பரிய கலைகளும் கலைஞர்களும் பாரம்பரிய சமூக அறிவினைக் கடத்துபவர்களாகவும் பரிமாறுபவர்களாகவும் அச்சமூக ஆளுமைகளாகவும் இருந்து வருகின்றனர். அதேவேளை அவர்கள் சமூக ஏற்றத்தாழ்வு ஒடுக்குதல்களுக்கும் உள்;ளாகி வருபவர்கள். ஆனால் பாரம்பரிய கலைகள் நலிவடைந்து வருகின்றன என நாம் கூக்குரல் எழுப்புகின்றோம். ஏன் நலிவடைந்தன? ஏன்னும் அதன் யதார்த்த நிலை பற்றிய புரிதல் அவசியமானது.
பாரம்பரிய கலைகளை தங்களின் வாழ்வியலின் ஒரு பகுதியாய்க் கொண்டு செல்லும் கலைஞர்கள் அக்கலைகள் போலவே புறக்கணிக்கப்படுகின்றனர். சாதிய சமூக ஒடுக்குதலை பறை என்னும் கருவிக்கும் அவ்வறிவினைக் கடத்தி பரிமாறி வரும் சமூகத்தின் மீதும் ஒடுக்குதலாகவே மாற்றுகின்றோம். இத்தகைய சமூகச் சூழலிலும் பறைமேள இசை ஆளுமையாக தன்னை அடையாளப்படுத்தியவரே கலாபூசணம க.பரசுராமர். இவர் மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்தவர். சிறந்த பறைமேளக் கலைஞராய் செயற்பட்டவர். பறையைத் தூக்க மாhட்டோம் என்னும் இளந் தலைமுறையினரின் கோசங்கள் நடுவிலும் தன் பட்டறிவில் நின்று தனி ஒரு நபராக தன்னை பறைமேளக் கலைஞராய் அடையாளப்படுத்திய ஆளுமை.
பாரம்பரிய கலைஞர்கள் கூட்டு சமூக செயற்பாட்டின் வழி உருவாக்கப்படுகின்றனர். ஏனெனில் தங்களது சமூகத்தில் செயற்படும் ஆளுமைகளின் வழி அடுத்த தலைமுறையினர் கற்றுக்கொள்கின்றனர். இத்தகைய மரபுச் சூழல் வழி உருவாகியவரே பரசுராமன். இத்தகைய மரபுச் சூழல்கள் சாதிய ஒடு;க்குதல்கள் நவீன வாழ்வியல் முறைகள் ஊடாக மாற்றத்திறகுள்ளாக்கப்படும் போது பாரம்பரிய கலைகள் தங்கள் இருப்பினை இழக்கின்றன. அதன் இருப்பினைத் தக்கவைத்தல் என்பது அக்கலையை இயங்கு நிலையில் வைத்திருத்தலாகும். தனி ஒருவராகவும் பறை என்னும் கலையினை தக்கவைத்தவராய் பரசுராமன் விளங்குகின்றார். பல்கலைக்கழக மாணவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் ஆரம்ப அடிப்படைத்தாளங்களைக் கற்;பித்த ஆசிரியர். பொதுவெளியில் அவர் மீதான சாதிய பார்வைகளை அமைதியாக தன் அறிவாலும் இசையினாலும் கடந்து வந்தவர்.
பறையை அமங்கல வாத்தியக் கருவியாக தொடக் கூச்சப்பட்ட ஒரு சூழலில் பறையை தன் கலையாக முன்வைத்தவர். அவர் மீண்டும் மீண்டும் தன் செயற்பாட்டின் வழி பறையை பாரம்பரிய தழிமர் வாத்தியமாக முன்வைத்தார். பறையை பொதுவெளியில் நிகழ்ப்படுப்படும் பாரம்பரிய கலையாக கொண்டு சென்ற செயற்பாட்டில் இவர் முக்கியமானவர். பெண்கள் பறையைத் தொடுதல் தீட்டு எ;ன்னும் கருத்தியலுக்கு மாறாக பெண்களுக்கு பறை வாசிப்பினை பழக்கியவர். நெகழ்ச்சியான அமைதியான பறைமேள இசைக் கலை ஆளுமையாளர்.
கி.கலைமகள்