205
நாடு தழுவிய ரீதியில் வரி சீர்திருத்தத்தை உடனடியாக நிறுத்த கோரி முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
போராட்டத்தில் வங்கி ஊழியர் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்,மின்சார சபை பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்று ஆதரவு வழங்கின.
இதேவேளை தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின், தொழிற்சங்க ரீதியாக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.
Spread the love