188
சாய்ந்தமருது காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் இன்று காலை மண்ணில் புதையுண்ட நிலையில் மா்மப்பொருள் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. குறித்த மா்மப்பொருள் தொடர்பாக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இனங்காணப்பட்ட குறித்த மா்மப்பொருள் பழையதா அல்லது வேறு இடம் ஒன்றில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளதா என்ற விசாரணைகளை காவல்துறையினா் முன்னெடுத்துள்ளனர். மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த மா்மப்பொருள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love