242
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியை வென்று மும்பை அணி சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற இப் போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்கள் எடுத்தது. இதனைடுத்து 132 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி , 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. .
Spread the love