Home உலகம் டிரம்ப்  கைது

டிரம்ப்  கைது

by admin

நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்  என்பவருக்கு   பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு  டிரம்ப்  , ஜனாதிபதி தேர்தலில்போட்டியிட்ட போது, அவருடன் இருந்த ரகசிய உறவு குறித்து ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார். இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை கிளப்பிய  போதும் , இந்த குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார்.

தேர்தல் பிரசார சமயத்தில்  ஸ்டார்மி வெளியிட்ட தகவலால் டிரம்புக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டதையடுத்து இவ்விவகாரத்தை ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு  1.07 கோடி  ரூபா டிரம்ப் மூலம் வழங்கப்பட் டு அது   டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று கணக்கில் காட்டப்பட்டது.

அமெரிக்காவை பொறுத்தவரை அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் ஆகும். எனவே டிரம்ப் மீது  விசாரணை நடந்து வந்த நிலையில் அண்மையில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் குற்றவியல்  குற்றச்சாட்டு அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. இதனால் டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியிருந்ததுஃ

இது தொடா்பான  வழக்கு அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில்     டிரம்ப்  நேற்று (04)  நீதிமன்றத்தில் முன்னிலையானதை தொடர்ந்து டிரம்ப் கைது நியூயார்க் நீதிமன்றத்தில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More