225
இந்தோனேசியாவின் கெபுலாவான் பட்டு பிரதேசத்தில் இன்று அதிகாலை , சுமார் 6 ரிக்ரா் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
முதல் நிலநடுக்கம் இன்று அதிகாலை , 6.1 ரிக்ரா் அளவில் கெபுலாவான் பட்டு எனும் இடத்தினைத் தாக்கியது. அதைத் தொடர்ந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு 5.8 ரிக்ரா் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நிலநடுக்கம் 43 கிலோமீற்றர் ஆழத்திலும், இரண்டாவது நிலநடுக்கம் 40 கிலோமீற்றர் ஆழத்திலும் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது
Spread the love