Home இலங்கைதையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் அங்கஜனும் பங்கேற்பு

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் அங்கஜனும் பங்கேற்பு

by admin
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , விகாரையை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளதையும் கண்டித்து , ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தையிட்டி பகுதிக்கு சென்று , போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மாவட்ட செயலர் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது.

அதன் போது கூட்டத்தில் பங்கு பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் , சி. சிறிதரன் , த. சித்தார்த்தன் , மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தவர்கள் மாவட்ட செயலகத்தில் இருந்து நேராக தையிட்டி பகுதிக்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் இணைந்தனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More