158
யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஹயஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் பூம்புகார் பகுதியை சேர்ந்த அற்புதசிங்கம் சுதர்சன் (வயது 39) எனும் நபரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love