Home இலங்கையாழில். டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்!

யாழில். டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்!

by admin

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தை  எதிர்வரும் 16 ஆம் திகதி மற்றும் 17ஆம் திகதிகளில்  மாவட்டம் முழுவதுமாக யாழ்.மாவட்ட செயலகம்  முன்னெடுக்கவுள்ளது.

சுகாதார திணைக்களம், உள்ளூராட்சி சபைகள், மற்றும் பிரதேச செயலகங்கள் மூலம்   முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டம்  கிராம சேவையாளர்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில்டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தில் பொது அமைப்புக்கள், பொதுமக்கள் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட செயலகம் கோரியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More