409
பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில்
ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளும்
எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களும் தொடர்பாக தனியார் கல்வி
நிலையங்களுக்கான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரனின் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை காலை 09 மணி தொடக்கம் 1 மணிவரை குழுக்
கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் சுகாதாரம், கல்வி, மதத் தலைவர்கள், காவல்துறையினா் , தனியார் கல்வி நிலைய நிறுவனங்கள், பெற்றோார், மாணவர்கள் போன்றோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
Spread the love