Home இலங்கை யாழில். ஹெரோயின் நுகர்ந்த இளைஞன் உயிரிழப்பு

யாழில். ஹெரோயின் நுகர்ந்த இளைஞன் உயிரிழப்பு

by admin

 

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.  யாழ்.நகரை அண்டிய பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இளைஞன் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில் ஹெரோயின் போதை பொருளை ஊசி மூலம் தனது உடலில் செலுத்திய வேளை மரணம் சம்பவத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் போதைக்கு அடிமையானவர் எனவும் , ஏற்கனவே போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More