Home இலங்கைநல்லிணக்கபுரத்தில் இருந்து நடேஸ்வராவிற்கு பேருந்து சேவை!

நல்லிணக்கபுரத்தில் இருந்து நடேஸ்வராவிற்கு பேருந்து சேவை!

by admin

யாழ்ப்பாணம் கீரிமலை நல்லிணக்கபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி வரை புதிய பேருந்து சேவையொன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதலாம், இரண்டாம் தர மாணவர்களுக்கு இலவசமாகவும் ஏனைய தர மாணவர்கள் சாதாரண கட்டணத்துடனும் குறித்த போக்குவரத்து சேவையை பயன்படுத்த முடியும்.

யா/நடேஸ்வராக் கல்லூரி மாணவர்களின் நலன்கருதி, நடேஸ்வரா கல்லூரி ஐரோப்பிய பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் நேற்றைய தினத்திலிருந்து, தொடர்ச்சியாக பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து மயிலிட்டி நோக்கிப் புறப்படும் 769 தனியார் பஸ் சேவையானது, மாவிட்டபுரம் கீரிமலை வீதி ஊடாக நல்லிணக்கபுரம் சென்று யா/நடேஸ்வராக் கல்லூரி ஊடாகப் பயணிக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பாடசாலை நாட்களில் இடம்பெறவுள்ள குறித்த போக்குவரத்து சேவை காலையில் 7.10 , 7.30 மற்றும் 7.40ற்கும் மதியம் 1.40ற்கு பாடசாலையில் இருந்து நல்லிணக்கபுரம் வரை இடம்பெறும்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More