381
அதிகளவிலான முன்பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் 11 மாணவர்கள் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம், கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முன்பள்ளி ஒன்றுக்கு 11 மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி வீதியோரமாக கவிழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அதன் போது , முச்சக்கர வண்டிக்குள் இருந்த 11 மாணவர்களும் காயமடைந்துள்ளதுடன் , முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த 12 பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love